
செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆதரவில் தீபாவளி திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் ஜூனியர் பாடல் போட்டி அரையிறுதி சுற்று இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 112 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று நடக்கும் அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் 10 பேர் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெறுவார்கள். இளம் பாடகர்களை உருவாக்கும் படலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த போட்டியின் அரையிறுதி சுற்றை Arogya ATV Link வழி நேரடியாக கண்டுகளிக்கலாம்
Arogya ATV link : https://www.youtube.com/channel/UCoqlQ1YlCtypzBhsLUi7vVw
