29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நீரை இழுத்து வெளியேற்றும் புதிய இயந்திரம் ஏன் பொருத்தப்படவில்லை! மாண்புமிகு கணபதி ராவ் கேள்வி

🔥 Views : 6
👁 Reading Now : 33

ஷா ஆலம் ஸ்ரீ மூடா மற்றும் கிள்ளான் பகுதிகளில் ஏற்படும் வெள்ள நீரை இழுத்து வெளியேற்றும் புதிய இயந்திரம் என் பொருத்தப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் கேள்வியை எழுப்பியுள்ளார். தற்போது பெய்து வரும் அடை மழையால் ஷா ஆலம் மற்றும் கிள்ளான் வட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஷா ஆலம் ஸ்ரீ மூடா பெரிய கால்வாயில் நீரை வெளியேற்றுவதற்காக புதிய இயந்திரம் பொருத்துவதற்கு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் அந்த புதிய இயந்திரம் பொருத்தப்படவில்லை. நீர் பாசான வடிகால் இலாகா அதிகாரிகள் புதிய இயந்திரத்தை பொருத்துவதில் அலட்சியமாக உள்ளனர். இதனால் கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி பலமுறை கேள்வி எழுப்பி விட்டேன். ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் இந்த இயந்திரம் பொருத்தப்பட்ட இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles