29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

எங்களுக்கு சொந்த வீடுகள் கலிடோனியா தோட்ட மக்கள் மகிழ்ச்சி

🔥 Views : 6
👁 Reading Now : 40

40 ஆண்டுகால போராட்டத்த்திற்குப் பிறகு,பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் முயற்சிக்குப் பிறகு தென் செபராங் பிறை ,நிபோங் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தில்,நாங்கள் திருப்தி அடைகிறோம் என கலிடோனியா மக்கள் தெரிவித்தனர். பினாங்கு மாநில அரசாங்கம் எடுத்துக் கொண்டு அங்கு வேலை செய்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் ஏற்பாட்டில்”தாமான் கலிடோனியா இண்டா” எனும் பெயரில் வீடமைப்பு மேம்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநில அரசாங்கம் வகுத்துள்ளபடி இரண்டு அறைகள் உட்பட மற்ற வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் வீட்டை,அதனை பெறவிருக்கும் தோட்ட மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு மனநிறைவு தெரிவித்தனர். கலிடோனியா தோட்ட மக்களுக்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சி இன்று பினாங்கு மாநில அரசாங்கம்,மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி,அழகான வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வரும் எகோவேல்டு மேம்பாட்டு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரியும்,துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு அவர்களுக்கும் தோட்ட மக்களின் சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles