
பிரிட்டனுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுலா மேற்கொண்டிருக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் நேற்று அங்குள்ள மலேசிய இந்தியர் சொந்தமான உணவகத்தில் மதிய உணவை உட்கொண்ட புகைப்படங்களை இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ளது. லண்டனிலுள்ள Market Hall Victoriaவில் Gopal’s Corner எனும் அந்த உணவகம் மலேசியாவில் பிறந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்தியரின் கடை என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் Roti canai மற்றும் Kari Kepala Ikan ஆகியவைகளுக்கு Gopal’s Corner உணவகம் மிகப் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
