30.6 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

உலகளாவிய ஆசிரியர் விருதை வென்று கோமதி சாதனை

🔥 Views : 26
👁 Reading Now : 61

AKS கல்வி அமைப்பின் ஏற்பாட்டிலான 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கல்வி விருதை ஈப்போ AVE MARIA CONVENT தேசிய இடைநிலைப் பள்ளியின் ரசாயன ஆசிரியை V. Komathy வென்று சாதனை படைத்திருக்கிறார். 14 ஆண்டு காலமாக ஆசிரியையாக இருந்துவரும் 38 வயதுடைய கோமதிக்கு அனைத்துலக அங்கீகாரத்திற்கான அந்த விருது நேற்று வழங்கப்பட்டது. AKS கல்வி விருதின் YOUTUBE சேனல் இணையம் வாயிலாக நடத்தப்பட்ட சடங்கின் மூலம் கோமதி அந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருது தமக்கு கிடைத்திருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் செப்டம்பர் 29ஆம் தேதி தமக்கு தெரிவித்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்ததாக மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோமதி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles