
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள அம்னோ உயர்மட்டத் தலைமைத்துவம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து இது குறித்து பாஸ் தனது முடிவை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என்று மலாக்கா மாநில பாஸ் தலைவர் டத்தோ கமாருடின் சீடேக் தெரிவித்தார். அம்னோவிடமிருந்து ஆகக் கடைசியானத் தகவல் கிடைத்ததற்காக பாஸ் கொள்கை அளவில் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.



