
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வங்காள தேச அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கெடா சமூக சேவகர் செகு இராமசாமி வலியுறுத்தினார். வங்காளதேச சிறும்பான்மை இந்துக்களின் உடமைகளையும் சூரையாடும் கும்பலுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்துகளை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தீர்வு காண ஐ.நா ஐக்கிய நாட்டு சபை இந்நாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றமே என்று செகு இராமசாமி வேதனை தெரிவித்தார்.



