
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தஞ்சோங் பிடாரா தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் இங்கு அம்னோ சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பெர்சத்து சார்பில் துணை அமைச்சர் டத்தோ மாஸ் எமியார்த்தி போட்டியிடுகிறார். இவர்களுக்கு மத்தியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் வேட்பாளர் ஜைனால் ஹசான் போட்டி இடுகிறார். இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. நான் ஒரு ஹெவிவெய்ட் வேட்பாளர் என்றாலும் போட்டியை சாதாரணமாக கருதவில்லை என்று டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் தெரிவித்தார்.



