
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானனைச் சேர்ந்த நடிப்பு சட்டமன்ற உறுப்பினர் ஜி சாமிநாதனை எதிர்த்து மொத்தம் 6 பேர் போட்டியிடுகிறார்கள். ஒரு போராட்ட வாதியான சாமிநாதன் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். சாமிநாதனை ஆதரித்து ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் உட்பட பக்கத்தான் ஹரப்பான் இந்திய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல் தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர் சண்முகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ம இகா தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் தற்போது காடேக் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. காடேக்கில் வெற்றி மாலை சூடபோவது சாமிநாதனா அல்லது சண்முகமா என்பது நவம்பர் 20 ஆம் தேதி தெரிந்து விடும்.



