
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவு வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்தத் தேர்தல் ஒரு விசித்திரமான தேர்தலாக வாக்காளர்களால் பார்க்கப்படுகிறது. மத்தியில் கூட்டாக ஆட்சியை நடத்தும் தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனலும் மலாக்கா மாநிலத் தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டி இடுகின்றன. இது அரசியல் கோமாளித்தனம். இதுவொரு அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பின் இந்த இரு தரப்பினரும் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் ஒன்றுசேருவார்கள். ஒருகால் தேசிய முன்னணியோ அல்லது பெரிக்கத்தான் நேஷனல் வென்றால் ஆது, லஞ்ச ஊழலுக்கும் இனவாத அரசியலுக்கும் ஆதரவு தெரிவித்ததாக ஆகிவிடும். எனவே, நாட்டில் நடுநிலையான அரசியல் நிலைப்பாடு தொடர வேண்டுமானால் இந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றிபெற வேண்டும். ஆதலால், மலாக்கா வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை உணர்ந்து வரும் 20-ஆம் தேதி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று ஜசெக இந்திய தலைவர்களில் ஒருவருமான சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



