
மித்ரா நிதி ஒதுக்கீடு வெளிப்படையாக மற்றும் நேர்த்தியான முறையில் செயல் படுவதற்கு மித்ரா நிர்வாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜசெக கிளைத் தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் பலராமன் கேட்டுக் கொண்டுள்ளார். மித்ரா நிதி மூலம் உணவு கூடைகள் வழங்குவதால் இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் முன்னேறி விட முடியாது. ஆகவே மித்ரா நிதி ஏழை இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் மித்ரா நிர்வாகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடம்பெற்றிருப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்தவொரு மோசடியும் நிகழாமல் பார்த்துக் கொள்ள உதவும் என்றார் அவர்.



