
பெம்பான், காடேக் தொகுதிகளில் மசீச மற்றும் ம இகாவின் வேட்பாளர் பிரச்சினை வேட்புமனு தாக்கல் 2 நாட்களுக்கு முன்பு தீர்வுக் காணப்பட்டு விட்டதாக அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அகமட் மஸ்லான் தெரிவித்தார். இப்பிரச்சனை உண்மையில் அத்தொகுதிகளை ம.இ.கா, ம.சீ.ச.விடம் ஒப்படைக்கப்பட்டப் பிறகுதான் தீர்ந்தது. இதில் எப்படியிருப்பினும் இவ்விரு தொகுதிகளையும் தேசிய முன்னணி வென்று விடும் என்ற அதிக எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன். இத்தொகுதிகளைத் திரும்ப அம்னோவிடம் ஒப்படைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்
