33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சாமிநாதன் எங்கள் வீட்டுப் பிள்ளை காடேக் வாக்காளர்கள் கண்ணீர் பேட்டி

🔥 Views : 12
👁 Reading Now : 68

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் காடேக்கில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று தொகுதி மக்கள் கண்ணீரோடு கூறுகிறார்கள். காடேக்கில் வியாபாரம் செய்யும் ஏராளமான அங்காடி வியாபாரிகள் கடைகள் அமைக்க உதவி புரிந்தவர் மாண்புமிகு சாமிநாதன் என்று புவான் ரோக்கியா கண்ணீரோடு குறிப்பிட்டார். நான் வெள்ளத்தில் ஒட்டு கடையை வைத்து வியாபாரம் செய்தபோது எனக்கு புதுக்கடை அமைத்து கொடுத்தவர் சாமிநாதன். அவர் எங்க வீட்டு பிள்ளை. காடேக் மக்களுக்கு அவர் பெரும் உதவி புரிந்து கொண்டிருக்கிறார் என்று புவான் ரோக்கியா கண்ணீரோடு குறிப்பிட்டார். காடேக்கில் இனம் நிறம் பார்க்காமல் அனைத்து இனத்தவருக்கும் சாமிநாதன் உதவிக் கொண்டிருக்கிறார் என்று வாக்காளர் அஜிஸான் தெரிவித்தார். நான் பார்த்த சட்டமன்ற உறுப்பினர்களில் சாமிநாதன் மிகவும் சிறந்தவர். தொகுதி மக்களுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles