33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக கோபிந்த் டியோ, துணைத்தலைவராக கணபதிராவ் தேர்வு

🔥 Views : 9
👁 Reading Now : 57

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் மூன்று இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர். அதேசமயம் ஆட்சிக்குழு வில் இரு இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக தேர்வு பெற்றிருக்கிறார். சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார். ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ. ராய்டு மாநில செயலவைக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் வெற்றி பெற்றார்கள். இதில் கோபிந்த் சிங் டியோ 615 வாக்குகளும் கணபதிராவ் 633 வாக்குகளும் ராய்டு 504 வாக்குகளும் பெற்றனர். இதனிடையே, சிலாங்கூர் மாநில ஐசெக ஆட்சிக்குழவில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ப.யுகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles