29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

கெடா மாநில அரசு 4 இலக்க எண் விற்பனையை ரத்து செய்வதால் சட்டவிரோதமாக எழுதும் நடவடிக்கை தீவிரமாகும்

🔥 Views : 24
👁 Reading Now : 53

கெடா மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஸ் கட்சி அரசாங்கம் அடுத்தாண்டு தொடங்கி சட்டப்பூர்வ 4 D இலக்க எண் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இதனால் , பல சட்ட விரோத 4D இலக்க எண் முகவர்கள் அதிகரிக்கலாமென கெடா சமூக சேவகர் செகு இராமசாமி கூறினார். மேலும், இந்த 4D இலக்க எண் விற்பனையைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கும் அதிகரிகளிடம் கையூட்டு நடவடிக்கைகள் அதிகரிக்குமென தாம் அச்சப்படுவதாக செகு இராமசாமி வலியுறுத்தினார். மலேசியாவில் சட்டபூர்வமாக அதிஸ்ட இலக்க எண்கள் வாங்கும் நடவடிக்கை அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பல சட்ட விரோத முகவர்களின் வழி தொடர்ந்து எழுதப்பட்டு வருவதை காண்கிறோம். இனி கெடா மாநில அரசின் புதிய அறிவிப்பினால் ஆங்காங்கே பல 4 இலக்க சட்டவிரோத முகவர்கள் தலைத் தூக்குவார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles