
இந்நாட்டில் தேசிய முன்னணி .வின் வரலாறு முடிவடையாது. அதற்கு காரணமும் இல்லை, மாறாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் என்று சபா மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர், டத்தோஸ்ரீ புங் மொக்தார் தெரிவித்தார். தேசிய முன்னணி தொடர்பில் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை வெளியிட்டபோது அவர் மன அழுத்தத்திற்கு உள்ளானது போல் தெரிகிறது. இது ஜனநாயக நாடு என்பதால் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். யார் அந்த வார்த்தையை வெளியிட்டாரோ இப்போது அவரே அழுத்தத்திர்கு உள்ளாகியிருக்கிறார். அம்னோவும் தேசிய முன்னணியும் போதுமான வலிமைக் கொண்ட முதிர்ச்சியானக் கட்சிகள் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. வேறு எந்த கட்சியும் இதுபோன்றக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.



