29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பழிவாங்கும் எண்ணத்தில் கத்தியால் குத்தப்பட்டு வட்டி முதலை மரணம்

கிள்ளான், பண்டார் பாரு புக்கிட் திங்கி கோப்பிதியாமின் முன்புறம் கடந்த 6ஆம் தேதி வட்டி முதலை கத்தியால் குத்தப்பட்டு மரணமுற்றதில் பழிவாங்கும் எண்ணம் காரணமாய் இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ அர்ஜுனாய்டி தெரிவித்தார். இரு வெவ்வேறு குண்டர் கும்பல்களைச் சேர்ந்த வட்டி முதலை மற்றும் சந்தேக நபர்கள் அனைவரும் பழிவாங்கும் எண்ணத்தில் தங்களுக்குள் தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் 30 முதல் 40 வயதிற்குட்பட்ட அந்த 16 பேரும் குண்டர் கும்பலில் இணைந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் இவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரின் லெடாங் மற்றும் மூவாரில் மேற்கொள்ளப்பட்ட சில சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர். கடந்த 6ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் 47 வயதுடைய வட்டி முதலையை பாராங் கத்திக் கொண்டு 3 ஆடவர்கள் கொலை செய்திருக்கக்கூடும் ளென்று நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த அன்று கிள்ளான், பந்திங் சுற்றுப் பகுதிகளில் 6 ஆடவர்களை போலீஸ்காரர்கள் கைது செய்ததாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles