34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பானை வெற்றி பெற செய்து சரித்திரம் படைக்கட்டும் மலாக்கா மாநில இந்தியர்கள்

🔥 Views : 54
👁 Reading Now : 60

மலாக்கா மாநில இந்தியர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய இன்று நடைப்பெறும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் பக்கத்தான் தேர்வு செய்யுங்கள் என்று மலாக்கா மாநில தெபோங் தோட்டத்தில் பிறந்த மண்ணின் மைந்தனும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி அரிமா இயக்கத்தின் கூட்டரசு பிரதேச மாநிலத் தலைவருமான ஜேம்ஸ் செல்வராஜா கேட்டுக் கொண்டுள்ளார். 28 தொகுதிகளை கொண்ட மலாக்கா மாநிலத்தில் காடேக் மற்றும் ரிம் சட்டமன்ற தொகுதிகளில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு பக்கத்தான் ஹரப்பான் கட்சி வாய்ப்பு வழங்கி இருப்பது மலாக்கா மாநில இந்திய மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பு அளித்துள்ளதை தெளிவாக காட்டுகிறது. மலாக்கா மாநில இந்தியர்களின் எதிர்காலம் சிறப்பான அமைய வேண்டும் என்பதற்கு, இந்த இரண்டு இந்திய பிரதிநிதிகள் மாநில அரசாங்கத்தில் அவசியம் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.

இந்த அரிய வாய்ப்பை மலாக்கா வாழ் இந்திய வாக்காளர்கள் நன்கு பயன் படுத்திக்கொண்டு, மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சாமிநாதன் – காடேக் தொகுதி மற்றும் பிரசாந் குமார் – ரிம் தொகுதி வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். நல்லதொரு சிறந்த முடிவினை எடுக்கும் மாநில இந்திய வாக்காளர்களுக்கு நன்றினை கூறும் அதே வேளையில் அவ்விரு இந்திய வேட்பாளர்கள் அமோக வெற்றிப் பெற தனது வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles