
ம.இ.காவின் உயர்மட்ட தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று ம.இ.கா தலைமையகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் 3 உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். நடப்பு தலைவர் டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ், டத்தோ எம். முருகைய ஆகியோருடன் நிர்வாக செயலாளர் ஏ.கே ராமலிங்கம் , செயலாளர் டத்தோ அசோஜன், தகவல் பிரிவு தலைவர் டத்தோ குணாளன் ஆகியோர் உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார். இதனிடையே 21 மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு இம்முறை மொத்தம் 60 பேர் போட்டியிடுகின்றனர்.
