
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்வியால் பக்கத்தான் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் ஜசெக பெலுட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென் கருத்து குறித்து நேற்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார். நான் பதவி விலக வேண்டும் என்பதும் ஒரு கருத்து மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார். இது ஒரு கருத்து. நாங்கள் பரிசலீப்போம் என்று அவர் சொன்னார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஜசெக 4 இடங்களில் வெற்றி பெற்ற வேளையில் அமானா ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 11 இடங்களில் போட்டியிட்ட கெஅடிலான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



