33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

டென்மார்க்கில் நடைபெற்ற உடல் கட்டழகி போட்டியில் மலேசிய இந்திய பெண் டாக்டர் தர்ஷினி சாம்பியன் பட்டம் வென்றார்

🔥 Views : 8
👁 Reading Now : 20

மலேசிய சுபாங் ஜெயா வைச் சேர்ந்த டாக்டர் தர்ஷினி டென்மார்க் நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான உடல் கட்டழகி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற இந்த போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மாஸ்டர் பிரிவில் டாக்டர் தர்ஷினி முதலிடத்தைப் பிடித்து வாகை சூடினார். அதேசமயம் ஓப்பன் பிரிவில் பங்கேற்ற இவருக்கு 5ஆவது இடம் கிடைத்தது. தற்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டாக்டர் தர்ஷினி நாளை சனிக்கிழமை நடைபெறும் ஸ்பெயின் உடல் கட்டழகி போட்டியில் பங்கேற்கிறார். இவரின் கணவர் பிரித்திப் கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த மலேசிய உடல் கட்டழகர் போட்டியில் வெற்றி பெற்றார். கணவர் கொடுத்த உற்சாகத்தின் பேரில் என்று பல அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று வருவதாக 36 வயதான டாக்டர் தர்ஷினி ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles