31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

ஐந்து லட்சம் மாணவர்கள் பிடிபிஎன் கடனை திரும்ப செலுத்தவில்லை!

🔥 Views : 48
👁 Reading Now : 24

தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் எனப்படும் பி.டி.பி.டி.என்.கடன் பெற்ற மாணவர்களில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 284 மாணவர்கள் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும் என்று உயர் கல்வியமைச்சு நேற்று மக்களவையில் தெரிவித்தது.
கல்வியை முடித்த மாணவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 24 ஆயிரத்து 9 ஆகும்.
இதில் அவர்கள் 2,460 கோடி வெள்ளி கடன் தொகையை திரும்பச் செலுத்த ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு வழங்கிய அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 லட்சத்து 84 ஆயிரத்து 725 மாணவர்கள் கடனைத் திரும்பச் செலுத்த தொடங்கிய வேளையில் 7 லட்சத்து 51,216 பேர் கடனை முழுமையாக செலுத்தி விட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles