31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

ஜொகூர் சுடுகாடு மையங்களை ஊராட்சி மன்றங்கள் பராமரிக்க வேண்டும்!

🔥 Views : 50
👁 Reading Now : 59

ஜொகூர் லாபிஸ் மற்றும் சிகாமாட் சுடுகாட்டை நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நோக்கங்களுக்காக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் சமர்பிப்பதாக ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி தெரிவித்துள்ளார். சிகாமாட் முனிசிபல் கவுன்சில் (MPS) மற்றும் லாபிஸ் மாவட்ட கவுன்சில் (MDL) அந்த சுடுகாடுகளை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார். ஜோகூர் மாநிலத்தில் உள்ள தகன மையங்களை அரசு சார நிறுவனங்கள் தான் நிர்வகின்றன. சிலாங்கூரில் அனைத்து சுடுகாட்டு நிர்வாகமும் பராமரிப்பையும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் பராமரிக்கிறது. சிலாங்கூர் போலவே ஜோகூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளையும் ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். அரசு சார நிறுவனங்கள் சுடுகாடுகளை நிர்வாகம் செய்தால், மக்கள் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டி வரும் இதனால், வசதி குறைந்த மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சடலங்களை தகனம் செய்ய பணப் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். மேலும் சுடுகாட்டின் நிர்வாகம் உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டால் ஒரு சிறிய கட்டணமே வசூலிக்கப்படும். அனைவரும் நன்மை அடைவார்கள். அரசு சார நிறுவனங்களின் பராமரிப்பில் இருக்கும் லாபிஸ் மற்றும் செகாமட் சுடுகாடுகள் இன்னும் கட்டி முடிக்காமல் இருக்கின்றது. அரசு சார நிறுவனங்களிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் சுடுகாடுகளை கட்டி முடிக்காமல் வைத்திருக்கிறார்கள். இதனால், இந்த மாவட்டத்தை சார்ந்த மக்கள் தங்கா, குளுவாங் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது என்பதோடு மக்களும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles