33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடும்!

🔥 Views : 8
👁 Reading Now : 39

சரவாக் மாநில 12ஆவது சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்று சரவாக் தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் வேளையில் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு பக்கத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று சரவாக் மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் சோங் சின் ஜூன் தெரிவித்தார். கெஅடிலான் 47 தொகுதியில் போட்டியிடும் வேளையில் ஜசெக 20 இடத்திலும் அமானா 9 இடத்திலும் போட்டியிடும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles