
உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் சுவாமி சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் கோவிட் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இல்லாமலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் செல்ல வேண்டுமெனில் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். இவை நிலக்கல், பம்பையில் சரி பார்க்கப்பட்ட பின்பே சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
