
ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் தமிழ் வகுப்பு இடம்பெறும் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகத் தமிழர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல ஆண்டுகாலமாக வாழும் நிலையில், அங்கெல்லாம் தமிழ் வாழும் மொழியாக உள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரிலும் இலங்கையிலும் தமிழ் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. அதைப்போல கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஈழத் தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் அங்குள்ள பள்ளிகளில் தமிழ் வகுப்பும் இடம்பெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பது உலகத் தமிழர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறாது.
