
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் வரை 55 மாணவர்கள் தாய் மற்றும் தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக ஆகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலு லங்காட், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் பெர்டானா மாவட்டங்களில் மிக அதிகமான மாணவர்கள் ஆதரவற்றவர்களாக ஆனதாக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். அக்காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1,648 மாணவர்கள் ஆதரவற்றவர்களாக ஆனதை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.


