
செல்வேக்ஸ் சிலாங்கூர் பூஸ்டர்“ திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 57,000 தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநில அரசு இன்று இலவசமாக விநியோகிக்கவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் செல்கேர் கிளினிக்குகளில் இந்த தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த தடுப்பூசி சேவையை வழங்கும் செல்கேர் கிளினிக்குகள் தொடர்பான பட்டியலை செலங்கா செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
