30.1 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

⛽ சில மாநிலங்களில் பெட்ரோல் & டீசல் தட்டுப்பாடு; கால்டெக்ஸ், ஷெல் அறிவிப்பு – தற்காலிக பாதிப்பு!

மலேசியாவின் சில மாநிலங்களில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் தற்காலிக இடையூறு ஏற்படக்கூடும் என்று கால்டெக்ஸ் மலேசியா அறிவித்துள்ளது.

இதன்படி,
📍 பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் கிளந்தான் மாநிலங்களில் உள்ள சில கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக,
துறைமுகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தாமதம் விநியோக அட்டவணையை பாதித்துள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

“விநியோகத்தை விரைவுபடுத்தவும், பாதிப்பை குறைக்கவும் எங்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு மன்னிக்கவும்,” என்று கால்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஷெல் மலேசியா வெளியிட்ட அறிக்கையிலும்,
உலகளாவிய எண்ணெய் விநியோக மாற்றங்களால், பெட்ரோலுக்கான தேவையில் தற்காலிக அதிகரிப்பு ஏற்பட்டு, சில நிலையங்களில் குறுகிய கால எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.

“நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்கள் நிலையங்களில் தொடர்ந்து விநியோகம் நடைபெற உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், சில இடங்களில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது,” என ஷெல் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் தேவையான அளவுக்கு மட்டுமே எரிபொருள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles