29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

🕋 மக்கா ரூட் திட்டத்திற்கு மலேசியாவின் நன்றி!

🔥 Views : 10
👁 Reading Now : 38

மலேசிய ஹஜ் யாத்திரிகர்களுக்கு தொடர்ந்து நன்மை அளித்து வரும் “மக்கா ரூட்” (Makkah Route) திட்டத்திற்கு, சவுதி அரேபியா அரசாங்கத்திற்கு மலேசியா தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்லி ஹசன் தெரிவித்ததாவது,
சவுதி அரசு அறிமுகப்படுத்திய Nusuk அட்டை உள்ளிட்ட பல புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்கள், ஹஜ் யாத்திரிகர்களுக்கு பெரும் உதவியாக உள்ளன என்றார்.

“அல்ஹம்துலில்லாஹ், இந்த அற்புதமான திட்டங்களுக்காக சவுதி அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். காலத்திற்குக் காலம் இந்த சேவையின் தரம் மேம்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. நமது யாத்திரிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான (1447 ஹிஜ்ரி) ஹஜ் பயணத்தின் முதல் குழுவான 284 மலேசிய யாத்திரிகர்களை இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-இல் இருந்து வழியனுப்பிய பின்னர் அவர் ஊடகங்களுக்கு பேசியார்.

இந்த நிகழ்வில்:

  • துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
  • தபூங் ஹாஜி தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ரஷீத் ஹுசைன்
  • தலைமை செயல் அதிகாரி முஸ்தாகிம் முகமட்
  • மலேசியாவிற்கான சவுதி தூதர் ஒசாமா டாகேல் ஆர். அல்-அஹ்மதி

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கா ரூட் திட்டம், ஹஜ் யாத்திரிகர்களின் பயணத்தை எளிதாக்குவதோடு, அவர்களின் அனுபவத்தை மேலும் சீர்மையாக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles