28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

📰 கைரி ஜமாலுடின் மீண்டும் அம்னோவில் இணைப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 44

முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், மீண்டும் அம்னோ (UMNO) கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அம்னோ உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஷர்காசி இதனை உறுதிப்படுத்தினார்.

அம்னோவில் மீண்டும் சேர்வதற்காக, கைரி ஜமாலுடின் கடந்த மார்ச் 16ஆம் தேதி, கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அவர்களிடம் மேல்முறையீட்டு கடிதம் சமர்ப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து, அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

  • முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன்
  • முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் சையத் ஹமீத் சையத் ஜாபர் அல்பார்

ஆகியோரும் மீண்டும் அம்னோவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர், பொதுச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த மீள் இணைப்பு, அம்னோ கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles