27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பல ஆண்டுகளாக நிலப்பட்டாவுக்கு ஏங்கி கொண்டிருக்கும் காராக் மக்களுக்கு இப்போது விடிவுகாலம்! மாண்புமிகு காமாட்சி கேள்விக் கணைகள்

பகாங் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தனது தொகுதியில் உள்ள மக்கள் நீண்ட காலமாக நிரந்தர நிலா பட்டாவுக்கு காத்திருப்பது தொடர்பில் மாநில அரசுக்கு எதிராக கேள்விக் கணைகள் முன் வைத்துள்ளார். காராக் வட்டாரத்தில் குறிப்பாக Rumah Papan Karak, Bentong என்ற இடத்தில் 24 குடும்பங்கள் 1970ஆம் ஆண்டு முதல் நிலப்பட்டா வுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பலகை வீடுகளில் வாழும் இங்குள்ள மக்கள் நிலப்பட்டா கிடைக்கும் என்று 50 ஆண்டுகளை கடந்து விட்டார்கள். ஆனால் இந்த இடத்தில் பல்கலைக்கழகம் கட்டப்படுவதாக மாநில அரசாங்கம் கூறி கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியொரு திட்டம் வருகிறது என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேலும் இங்கு வசிக்கும் 24 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்குவதற்கும் மாநில அரசு முன்வராதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அவர் சொன்னார். இதனிடையே Karak Kampung Cerpai Dan Kampung Tepi Sungai ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களும் நிலப்பட்டாவுக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரி பலமுறை சட்டமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறேன். ஒரே குடும்ப மலேசிய என்று கூறிக் கொள்ளும் மாநில அரசாங்கம் தனது மாநிலத்தில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க முன் வர வேண்டும். நான்காவது தலைமுறை தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த கிராம மக்களுக்கு விரைந்து நிவப்பட்டா கொடுப்பதற்கு மாநில அரசு முன் வர வேண்டும் என்று காமாட்சி துரைராஜ் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles