
சீன தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாநில அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
