
நடப்பு அரசியல் சூழ்நிலையை பார்க்கும் போது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அரசாங்கம் விரைவில் பொதுத் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎன்று ஜொகூர் ஜசெக சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகட்ஸ் மாதம் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் பதவி விளகியதும் பதவி ஏற்று கொண்ட டத்தோ இஸ்மாய்லின் தலைமைத்தும் நூறு நாட்கள் நிறைவடைந்த நிலையை பார்க்கும் போது இந்த அரசாங்கத்தின் அடைவு நிலை மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை தெளிவாக காண முடிகிறது. குறிப்பாக நோய் தடுப்பு விவகாரம், அமைச்சர்களின் ஆலோசகர்கள் நியமனம்,காய்கறிகள்மமற்றும் பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுபடுத்துதல் போன்ற விவாகரங்களில் இந்த அரசாங்கம் செயல்பாடுகள் திருப்பி அளிக்கும் வகையில் இல்லை என்று அவர் சொன்னார். சரவாக் மாநில தேர்தலுக்கு பிறகு பிரதமர் பொது தேர்தலை அறிவிக்கலாம் என அருடங்கள் தோன்றுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தன்னை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மேலும் கடந்த மலாக்கா மாநில தேர்தலில் நடந்த சில தவறுகளை படிப்பினை எடுத்து கொண்டு வேட்பாளர் தேர்வு,அணுகுமுறை, மக்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றை சரி செய்து தேர்தலுக்கு தயார் ஆக வேண்டும் என சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.
