
இவ்வாண்டு நவம்பர் 20 ஆம் தேதி வரை 2 லட்சத்து 31,533 பூஸ்டர் தடுப்பூகளை சிலாங்கூர் சுகாதார இலாகா மாநில மக்களுக்கு வழங்கியுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். மேலும் 1 லட்சத்து 57,000 பேருக்கு சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத்தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சினோவேக் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு பிரிவு கடந்த மாதம் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
