26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இந்தியாவின் சக்தி, பக்தியை வெல்ல முடியாது : பிரதமர் மோடி பெருமிதம்

🔥 Views : 7
👁 Reading Now : 49

‘இந்தியாவின் சக்தி மற்றும் பக்தியை எந்த அழிக்கும் சக்தியாலும் வெல்ல முடியாது. ”நாம் நம்மை எப்படி பார்க்கிறமோ, அப்படியே உலகமும் நம்மை பார்க்கும், என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புனித நீராடல் கங்கை நதியில் இருந்து கோவில் வரையிலான பாதையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வளாகம் மற்றும் கட்டடங்களை மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். லலிதா பகுதியிலிருந்து கங்கை கரை வளாகத்துக்கு இரண்டு அடுக்கு படகில் பயணித்தார். அங்குள்ள கால பைரவர் கோவிலில் வழிபட்டார். பின் கங்கை நதிக்குச் சென்று நீராடினார். பூஜை செய்வதற்காக கங்கை நதியில் இருந்து நீரை சேகரித்தார். கோவிலில் பூஜைகள் செய்த அவர், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles