
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிக்கச் சென்றால் வரும் பொதுத்தேர்தலில் லஞ்ச ஊழல் எதிர்ப்பு வேட்பாளரும் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் உள்ளது என்று பெஜுவாங் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். ஒருவேளை மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று நினைத்தால் நேர்மையற்ற வேட்பாளர் கூட வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கட்சித் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாங்கள் தேர்வுச் செய்த அரசு கவிழ்ந்ததில் ஏராளமானோருக்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டதை நான் உணர்ந்தேன் என்றார் அவர்


