26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இந்திய சமுதாய சிக்கல் தீர இருதரப்பு முன்னெடுப்பு தேவை டாக்டர் இராமசாமி கோரிக்கை

🔥 Views : 4
👁 Reading Now : 68

மலேசிய இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆளும் அணியும் எதிர்தரப்பும் இணைந்த இருதரப்பு அணுகுமுறை தேவையென பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி குறிப்பிட்டுள்ளார். இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண எதிர்க்கட்சி இந்திய தலைவர்களுடன் ஒத்துழைக்க மஇகா தயார் என அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ. விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள பரிந்துரையைத் தாம் வரவேற்கிறேன். இந்த நிலையில் இப்பிரச்சினைகள்ளுக்குத் தீர்வு காண மஇகாவுடன் ஒத்துழைக்க எதிர் கட்சி இந்திய தலைவர்கள் என்றுமே தயார் என்ற அவர், இந்நாட்டில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்திய சமூகம் தொடக்க காலத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது என்றார். அதேவேளை, இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கு தேசிய முன்னணி அரசாங்கம் முறையான அங்கிகாரத்தை தரவில்லை என்பதே உண்மை. இந்த நிலையில் இந்திய சமுகத்தின் நலன்களைப் பேண ஒரு சிறப்பு அமைச்சரவைக் குழுவை அமைக்கப்போவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் தெரிவித்துள்ளதை வரவேற்கும் அதேசமயம், இது குறித்து அரசாங்கமும் மஇகா-வும் நேர்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles