
தடுப்பு காவல்களில் நிகழும் மரண சம்பவங்களை விசாரிக்க போலீஸ் தனிப்பிரிவு ஒன்றை அமைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிவித்துள்ளார். வரும் ஜன 1 ஆம் தேதி முதல் இக்குழு செயல்படும். 12 பேர் கொண்ட இந்த பிரிவில் போலீஸ், ஒரு அரசு ஊழியர் மற்றும் ஒரு உயர்நிலை போலீஸ் அதிகாரி ஆகியோர் இடம் பெறுவர் என டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார். தடுப்புக்காவல் மரண சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கையை ம இகா வரவேற்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார். உள்துறை அமைச்சு மற்றும் போலீஸ் இணைந்து இந்த பிரிவை அமைப்பதன் மூலம் தடுப்புக்காவலில் எதிர்பாராத மரண சம்பவங்கள் நடக்காமல் இருக்க இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
