
ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வட்டாரத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் 20 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வேதனையுடன் தெரிவித்தார். கிள்ளான் நகரைச் சுற்றியுள்ள தாமான் சேர்ந்தோசா, பண்டார் பொட்டானிக், புக்கிட் திங்கி, பண்டமாரான், தாமான் தெலுக் காடோங், கம்போங் ஜாவா, தாமான் ஸ்ரீ மூடா, பத்து தீக்ஷா, புக்கிட் கமுனிங் உட்பட 20 இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வருகிறார்கள் என்று அவர் சொன்னார். வீட்டில் இருந்த தளவாட பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து 24 மணி நேரத்தையும் தாண்டி மழை பெய்து கொண்டிருப்பதால் நிலைமை மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
