29.8 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

ஐபிஎப் கட்சியின் மாநாடு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் செயலாளர் மோகன் அறிவிப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 21

ஐபிஎப் கட்சியின் 29 ஆம் ஆண்டு தேசிய பேராளர் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காஜாங் ஆஃப் டவூன் தங்கு விடுதி மண்டபத்தில் திட்டமிடப்படி நடைபெறுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் மோகன் தெரிவித்தார். நாடு தழுவிய அளவில் இந்த மாநாட்டில் 300 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள். வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது என்று அவர் சொன்னார். இந்த மாநாடு சட்டபூர்வமான முறையில் நடத்தப்படுவதால் பேராளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles