26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பழுது பார்க்க 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 8
👁 Reading Now : 70

நாட்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை பழுது பார்க்க 10 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இந்த 10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை கொண்டு மாநில அரசாங்கங்களுக்கு உதவிகள் வழங்கப்படும். மேலும் அவசர நிலையைப் பொறுத்து அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றார் அவர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார். நாட்டில் சில தினங்களாக பெய்த மழையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles