30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுகிறது கெஅடிலானன் இளைஞர் பிரிவு

நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கெஅடிலான் இளைஞர் பிரிவு நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளது. வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதமடைந்துள்ளன. வீடுகளையும் பழுது பார்க்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் கெஅடிலான் கட்சி இளைஞர் பிரிவு நிவாரண நிதியை திரட்டி வருகிறது என்று ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினரும் கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவருமான அக்மல் நாசிர் தெரிவித்தார். உதவிகள் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்எச்பி வங்கி 2124 39600 10033 என்ற கணக்கில் நிதியை சேர்க்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles