25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனை : நீர் பாசன இலாகா அதிகாரிகளை அன்றே எச்சரித்தார் கணபதிராவ்

🔥 Views : 9
👁 Reading Now : 34

ஶ்ரீ மூடா பகுதியில் நீர் பாசன வடிகால் பம் சரியில்லாததால் அடிக்கடி வெள்ளம் ஏற்படக் காரணம் என்பதை உணர்ந்து அன்றே அதன் அதிகாரிகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் எச்சரித்தார். ஷா ஆலம் தாமான் ஸ்ரீ முடாவில் உள்ள நீர் தேக்கத்தில் நீரை வெளியேற்றும் பம் செயல்படவில்லை என்றார். தாழ்வான நில அமைப்பைக் கொண்ட அப்பகுதியில் இருக்கும் வடிகால், ஆறு, நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. நீரை வெளியேற்றும் இயந்திரம் செயல் படாது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். நீர் பாசன வடிகால் இலாகா அதிகாரிகளின் பொறுப்பற்றத் தனத்தை கண்பதிராவ் அன்று கடுமையான சாடினார். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த அடைமழையால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதில் தாமான் ஸ்ரீ முடா பகுதி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாமான் ஸ்ரீ முடாவில் வெள்ளம் சூழ்ந்ததற்கு வடிக்கால், நீர்பாசனத் துறையின் அதிகாரிகளின் திட்டமிடல் மிக மோசமானதாக இருந்தும் ஒரு காரணமாகும் என்று கூறப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles