33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செந்தோசா மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவி வருகிறார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

நாட்டை உலுக்கிய மிக மோசமான வெள்ளப் பேரிடரில் கிள்ளான் செந்தோசாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்து கொண்டது முதல் இதுநாள் வரை செந்தோசா மக்களுக்கு அதன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தமது குழுவினருடன் இணைந்து இரவு பகல் பாராமல் மக்களுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகள் முதியோர்கள் உடுத்துவதற்கு உடைகள், போர்வைகள், தளவாடங்கள் மற்றும் இதர பொருட்களையும் வழங்கி மக்களுக்கு பேருதவி புரிந்துள்ளார்.

வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து உதவி கொண்டிருக்கும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கவுன்சிலர்கள், கிராமத் தலைவர்களின் பணியை செந்தோசா வட்டார மக்கள் பாராட்டியுள்ளனர். வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் செந்தோசா கெஅடிலான் உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles