25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தாஸ் சகோதரர்களுடன் கைகோர்த்த ஈப்போ மக்கள் ! வெள்ள நிவாரணத்திற்கு 40 டன் பொருட்களை ஒன்று திரட்டி அனுப்பினர் !

🔥 Views : 7
👁 Reading Now : 29

உதவிகள் வேண்டும்!” எனும் ஒரே ஒரு செய்தியை கேட்டு இரு சகோதரர்களின் ஒருமித்த எண்ணம் ஈப்போ மக்களின் ஒரே குரலாக ஒலித்தது. வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கையில் 40 டன்களுக்கு மேலானப் பொருட்களை அனுப்பி வைத்தனர். கெல்வின் தாஸ், அவரது அண்ணன் ஆபிரகாம் தாஸ், இந்த இருவர் தான் அந்தப் பெரும் முயற்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆவர். மீ கோரேங் கடை வைத்திருக்கும் தாஸ் சகோதரர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈப்போ வட்டாரத்தில் பொருட்களை திரட்டினார் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு உதவிப் பொருட்களை கிடைத்தது. ஷா ஆலாம், பெந்தோங், காராக் பகுதிகளுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு செல்ல லாரி சேவை உதவி தேவை என்று ஆபிரகாம் தாஸ் காணோலி வெளியிட்டார். பின்னர் லோரி உதவிகள் கிடைத்ததும் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு 40 பொருட்களை அனுப்பி வைத்து இரு சகோதரர்களும் சாதனை படைத்திருக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles