
நாடு முழுவதும் வெள்ளத்திற்கு 54 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் மேலும் இருவரை இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 25 பேர் வெள்ளத்திற்கு பலியாகியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ ஹசானி கசாலி கூறினார். சிலாங்கூருக்கு அடுத்து பகாங்கில் 21 பேரும் கிளந்தானில் நால்வரும் சபாவில் மூவரும் நெகிரி செம்பிலானில் ஒருவரும் இந்த வெள்ளப் பேரிடரில் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.
