
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ மத்திய அரசு, மாநில அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டூழிய இயக்கங்கள் பெரும் அளவில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும் அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது என்று ஜொகூர் மாநில ஜசெக கிளைத் தலைவர்கள் ஒருவரான சுரேந்திரன் பலராமன் தெரிவித்தார். இனம் மதம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவி புரிந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

