
நாட்டில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதைத் மட்டுப்படுத்தவும் வனவளத்தைப் பாதுகாக்கவும் அரசு உறுதி கொண்டுள்ளதாக எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். ஓர் ஆண்டில் ஒரு மாநிலத்தில் இத்தனை மரங்கள்தான் வெட்டப்பட வேண்டும் என்று தேசிய நிலக் கழகம் வரையறை செய்துள்ளதை அமைச்சு எப்பொழுதும் கவனத்தில் கொள்ளும் என்றார் தக்கியுடின். பிரதமர் தலைமையில் மந்திரி பெசார்களும் மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட தேசிய நிலக் கழகக் கூட்டத்தில் நில வளமும் தாவர வளமும் கொண்ட வன வளத்தை தற்காப்பது குறித்தும் 2040-ஆண்டளவில் நாட்டில் 50% நிலப்பரப்பில் வனவளம் பேணப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் தக்கியுடின் அறிவித்தார்.



