
கோலாலம்பூர் தேசிய இருதயக் கழகம், ஐஜேஎன்-இல் சேர்ந்திருந்த துன் மகாதீர் நலிவு நீங்கி, பொலிவு சேர அண்மையில்தான் அங்கிருந்து விடைபெற்று இருந்தார். இந்த நிலையில், வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் களம் காண்போமா அல்லது ஒதுங்கி நிற்போமா என்று ஆழமாக சிந்தித்தாரோ என்னவோ? அல்லது 15-வது பொதுத் தேர்தலிலும் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆகாமல் அவரை அடியோடு காலை வாரிவிடுவது எப்படி என்று வேக வேகமாக திட்டம் வகுத்தாரோ என்னவென்று புரியவில்லை. இப்பொழுது அந்த இருதய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையம் மகாதீருக்கு மீண்டும் அடைக்கலம் கொடுத்துள்ளது.



